தங்கம் ஒரேநாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு
சென்னை, அக். 17– சென்னையில் வெள்ளியன்று ஆபரணத் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்துள்ளது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதேவேளையில், கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.203-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
