tamilnadu

img

தீக்காயங்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

தீக்காயங்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

கிருஷ்ணகிரி, அக்.18- பட்டாசால் குழந்தைகள் கண்களில் ஏற்படும் காயங்களுக்கு இலவச கண் சிகிச்சை வாசன் கண் மருத்துவமனையில் நடைபெறுகிறது. 15 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கான பட்டாசு தொடர்பான கண் காயங்களுக்கு இலவச கண் சிகிச்சை வழங்கும் சிறப்பு சமூக நல முகாம் அக்டோபர் 15 முதல் 24 வரை அனைத்து வாசன் ஐ கேர் மையங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. பட்டாசு காயங்களால் பாதிக்கப்பட்ட குழந்தை களின் நிரந்தர பார்வை இழப்பை தடுக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவ சியம் என்பதால், இத்தகைய அவசர சிகிச்சையை கையாள அனுபவமிக்க மருத்து வர்கள் குழு எப்போதும் தயாராக இருக்கிறது என்று மூத்த கண் நிபு ணர் தெரிவித்தார். பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள், பொது மக்கள் பாது காப்பாகவும் பொறுப்புடன் பட்டாசு வெடிக்க வேண்டும். கண் எரிச்சல், காயம் ஏற்பட்டால் தாமதமின்றி மருத்துவர் ஆலோசனை பெற வாசன் ஐ கேர் கேட்டுக்கொண்டுள்ளது. சமூக கண் நலம், அவசர சிகிச்சை, கண் விபத்து தடுப்பு விழிப்பு ணர்வில் வாசன் ஐ கேர் அர்ப்பணிப்போடு செயல் படுகிறது. உடனடியாக அருகில் உள்ள வாசன் ஐ கேர் மையத்தை 1800 571 3333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வாசன் ஐ கேர் சிறப்பு மருத்துவர்கள் கரண் மக்தும், தீபக் டி சுவாமி, சமிதா காலே, சுருதி, அலு வலர் சதீஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரி வித்தனர்.