மீனவர்களிடம் அத்துமீறும் வனத்துறை!
கடலூர் மீன்பிடி தொழிலாளர்கள் ஆவேசப் போராட்டம்
கடலூர், ஆக.11- மீனவ மக்கள் மீது வனத்துறையின் அத்து மீறலை கண்டித்தும் தடுத்து நிறுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் மற்றும் கடலூர் மாவட்ட மீன்பிடித் தொழி லாளர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், பிச்சாவரம் அருகே உள்ள சின்னூர் தெற்கு, சின்னூர் வடக்கு, சி.புதுப்பேட்டை மற்றும் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வரு கின்றனர். ஆண்டாண்டு காலமாக மீன்பிடித் தொழிலை நடத்தி வாழ்ந்து வரும் இவர்களுக்கு கிராமத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்த மக்க ளுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகள் தற்போது முழுவதுமாக சிதிலமடைந்துள்ளன. அந்த வீடுகளைச் சீர மைக்க, புதிய வீடுகள் கட்டு வதற்கு, மதில் சுவர் அமைப்பதற்கு வனத்துறை யினர் தடுத்து வருகின்றனர். இந்தப் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக வனத்துறையினர் தெரிவிப்பதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். எந்த வித கட்டுமானப் பணியும் நடைபெறக் கூடாது என்று வனத்துறையினர் தடுத்து வருவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுடு காட்டிற்குச் செல்லும் பாதை யைக் கூட வனத்துறை கொடுத்துள்ளதாகவும், பிணத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் கூறுகின்றனர். அத்துமீறலில் ஈடு படும் வனத்துறை மீது நடவடிக்கை எடுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீன் ஏற்றி இறக்குவதற்கும் வாகனப் போக்குவரத்திற்கும் அகல மான சாலை அமைக்க வேண்டும் என்றும், குடியி ருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளு போராட வந்தவர்களைப் போலீசார் தடுத்ததால் மாவட்ட ஆட்சியர் அலு வலகச் சாலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதில் 10 பேர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவதற்காக அழைத்துச் சென்று கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இத னால் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட தால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ஏழுமலை போராட்ட த்திற்குத் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், மீன்பிடிச் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் வி.வைத்திலிங்கம், மாவட்டத் தலைவர் பி.பாலு, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.அரசப்பன், மாவட்ட பொருளாளர் ஜி.சுந்தர மூர்த்தி, கைத்தறிச் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, போக்குவரத்துச் சங்கத் தலைவர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் நான்கு கிராம மீனவ பொதுமக்க ளும் கலந்துகொண்டனர்.