400 கிலோ எடைகொண்ட முதலையை மீட்ட வனத்துறை
சிதம்பரம், செப். 29 - சிதம்பரம் அருகே கூடுவெளி கிராமத்தில் வீட்டின் வாசலில் இருந்த 10 அடி நீளம் 400 கிலோ எடைகொண்ட முதலையை வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பாக குளத்தில் விட்டனர். சிதம்பரம் அருகே கூடுவெளி கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் சனிக்கிழமை இரவு அவரது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சீனிவாசன் மட்டும் எழுந்து வீட்டின் வாசலுக்கு வந்துள்ளார். அப்போது பெரிய முதலையை கண்டு பயந்துபோன அவர் கூச்சலிட்டுள்ளார். இவரது உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 10 அடி நீளமும் 400 கிலோ எடையுடைய முதலையைப் பொதுமக்கள் உதவியுடன் முதலையின் முகத்தில் ஈர சாக்கைப் போட்டு, பின்னர் முகத்தைக் கயிற்றால் கட்டி வாகனத்தில் எடுத்துச்சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்கராமரி குளத்தில் பாதுகாப்பாக விட்டனர்.
