மிருகண்ட நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை,செப்.19- திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள மிருகண்டாநதி அணையின் மொத்த உயரம் 22.97 அடியாகும். அதில் 17.88 அடி (சுமார் 69 விழுக்காடு) நீர் இருப்பு உள்ளது. தற்போது, மிருகண்டாநதி அணைக்கு வினாடிக்கு 110 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 18.00 அடியை (70%) (மொத்த உயரம் 22.97 அடி) அடையும் போது உபரி நீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி மிருகண்டாநதி மற்றும் செய்யாற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அணைக்கு வரும் உபரி நீரை வினாடிக்கு 100 கன அடி வீதம் வெளியேற்றப்படு கிறது.இதுகுறித்து கரை யோர மக்கள் மற்றும் கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் வட்டாட்சியர்களுக்கு தக வல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.