tamilnadu

தாலுகா அலுவலகத்திற்கு வெள்ள நிவாரணம்: திமுக எம்எல்ஏ

 சென்னை,ஜூலை 12- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் போக்குவரத்து வசதியில்லாத ஊருக்கு ஒதுக்குபுறத்தில் ராசா குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. மக்கள் எளிதில் செல்ல முடி யாத நிலையில் உள்ளதால் வேறு இடத்திற்கு மாற்ற அரசு முன்வருமா?  என்றும் தாழ்வான இடத்தில் உள்ள அந்த கட்டடம் கடந்த மழை  வெள்ளத்தின் போதும் பாதித்ததால் அங்கு பணியாற்றும் ஊழியர்க ளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும்  திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதய குமார், “ கடலூர் மாவட்டம் எப்போதும் மழை வெள்ளத்தால் பாதிக்கும்  மாவட்டம் என்பதால் அந்த கட்டடத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரி களிடம் கலந்து பேசிய மறு ஆய்வு செய்யப்படும்” என்றார். கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் ஏராளமாக காலியாக உள்ளது. அந்த இடங்களுக்கு புதியதாக நியமானங்களுக்கு மாறாக,  ஓய்வு பெற்றவர்களையே தொகுப்பூதிய அடிப்படையில் பணி அமர்த்துதை தவிர்த்து கிராம உதவியாளர்களை தகுதியின் அடைப்படையில் உடனடியாக நியமிக்க அரசு முன்வருமா? என்று பன்னீர்செல்வம் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர்,“கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடியா மல் காலதாமதம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க ஓய்வுபெற்ற வர்களை தொகுப்பூதிய அடிப்படையில் ஓராண்டு பணியில் அமர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் கிராம உதவி யாளர்களை கல்வித் தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவ லர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

;