tamilnadu

img

கொரோனா தடுப்புப் பணிக்கு திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் ஒரு மாத சம்பளம்....

சென்னை:
கொரோனா நோய் தடுப்பு  மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு தாராளமாக நிதியுதவி அளியுங்கள்என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இதனை ஏற்று திமுகஎம்எல்ஏக்கள் எம்பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தைவழங்குவதாக அறிவித்துள்ள னர்.

தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை இப்போது வேகமாக தாக்கி வருகிறது. இந்த நேரத்தில், தமிழகத்தில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு தாராளமாக நிதியுதவி அளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதன்படி, தொழிலதிபர்கள், திரைத் துறையினர் நிறைய பேர் அவரை சந்தித்து நிதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதனை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சரை சந்தித்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார்.இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒரு மாதம் சம்பளத்தை வழங்குவார்கள் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.