பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நிகழ்ந்த கார் விபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர்பலியாகினர். பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் திங்களன்று நள்ளிரவில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். ஒருவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணாசாகர் என்பவரும் பலியானது தெரிய வந்துள்ளது. கருணாசாகரின் மனைவி பிந்து என்பவ ரும் உயிரிழந்தார். இதுதவிர, கேரளாவை சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தவர் இரண்டு பேர் மற்றும் 3 பெண்களும் விபத்தில் உயிரிழந்தனர்.