திருவண்ணாமலையில் தீயணைப்பு நிலையம் திறப்பு
திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் கிழக்கு ராஜகோபுரம் முன்பு புதிய நிரந்தர தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் தீயணைப்பு வாகனத்தைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
