சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோரவிபத்து
ஆற்காடு அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிறன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் சொகுசு பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ்களின் உதவியுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
                                    