நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் ராணிப்பேட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
ராணிப்பேட்டை, செப்.15 – ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை உடனடியாக திறக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று (செப் 15) மாவட்ட செய லாளர் எல்சி. மணி தலைமையில் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. அரக்கோணம் வட்டம், மூதூர், வளர்புரம் பகுதிகளில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் புதிய விலை உயர்வுடன் செப்டம்பர் 1 முதல் திறப்பதாக தெரிவித்த நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த விவசாயிகள் 50 க்கும் மேற்பட்டோர் திங்களன்று (செப் 15) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது அலுவலகத்தில் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுத்து கெடுபிடி காட்டுவதாகவும், அதிகாரிகள் அலட்சியம் படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ள்ளது. இதில் மாவட்டப் பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், வி.ச அரக்கோணம் ஒருங்கிணைப்பாளர் பொன். சிட்டி பாபு, காந்தி ரெட்டி, வெள்ளப்ப ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.