tamilnadu

img

யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை விவசாயிகள் கோரிக்கை

யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை விவசாயிகள் கோரிக்கை

கடலூர், செப்.26- கடலூர் மாவட்டதில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்டு கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பயிற்சி ஆட்சியர் மாலதி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் கோ.மாதவன் பேசுகையில், “கடலூர் டவுன்ஹால் வாடகை உயர்த்தப்  பட்டதை குறைக்க வேண்டும். மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு உள்ள தால் விவசாயிகளுக்கு தடையின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் உள்ள நெல்கள் அனைத்தும் மழையால் சேதமடைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இஐடி பாரி சக்கரை ஆலை விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.349 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கோரிக்கை விடுத்தார். விசூர் விஜயகுமார் பேசுகையில், விசூர் பகுதியில் உள்ள ஓடையில் இருந்து செல்லும் வடிகால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மழை நீர் அனைத்தும் விளை நிலங்களில் தேங்கி யுள்ளதால் பயிர் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  விவசாயி கலியபெருமாள்,“ 70 வயது கடந்த விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இன்சூரன்ஸ், காய்கறி பயிரிடும் விவசாயிக ளுக்கு எலக்ட்ரிக் வண்டி மானியத்தில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குமரகுரு கருப்பன்,“சாவடி கிராமத்தில் உலர் களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செங்கால் ஓடையை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். ரவீந்திரன்,“வெட்டிவேர் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.  இறுதியாக பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.“விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.  கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.