tamilnadu

img

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

சென்னை:
தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்  முடிவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள்குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாதாமாதம் தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழகம் முழுவதும்  வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது. முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

;