tamilnadu

img

கொரோனா வைரஸ் எதிரொலி... வழிபாட்டு தலங்கள் மூடல்

சிங்னாப்பூர் சனி,சீரடி சாய்பாபாகோவில்கள் மூடல்
கொரோனா வைரஸ்பரவலை தடுக்கும் வகையில் மகாராஷ்டிராவிலுள்ள சீரடி சாய்பாபா கோவில் உட்பட பிரசித்திபெற்ற பல கோவில்களும் மூடப்பட்டுள்ளன. “வரலாற்றில் முதல் முறையாக சீரடி சாய்பாபா கோவிலை மூடி உள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கோவில்மூடப்பட்டு இருக்கும்” என்று சீரடி செய்தித் தொடர்பாளர் சுனில்தாம்பே தெரிவித்துள் ளார். மகாராஷ்டிராவின் பிரசித்தி பெற்ற சிங்கனாப்பூர் சனி பகவான்கோவிலும் மூடப்பட்டுள்ளது.

பக்தர்களின்றி வெறிச்சோடிய திருப்பதி
கொரோனா வைரஸ்அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்களின் எண் ணிக்கை வெகுவாக குறைந்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் வெறிச்சோடியுள்ளது. குறைந்த அளவே பக்தர்கள் வரும் நிலையில், தேவஸ்தான ஊழியர்கள், 2 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி மருந்துகளை தெளித்து வருகின்றனர். 

அயோத்தியில் ராம நவமி ரத்தாகிறது?
உத்தரப்பிரதேசத்தில் கோயில்கள், மசூதிகள் மற்றும் பிற மத தலங்களில் பெரிய கூட்டங்களைத் தடுக்குமாறு, அனைத்து மத குருக்களுக்கும், அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தார். அதனொரு பகுதியாக ராமநவமி விழாவும் கொரோனாவால் ரத்தாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. “நிலைமை கண்காணிக்கப்படுகிறது, சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்று அயோத்தி மாவட்ட நீதவான் அனுஜ் ஜா தெரிவித்துள்ளார்.