tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

கடலூர், ஆக. 23- தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6-வது நாளாக கடலூர் பணிமனை முன்பு (ஆக.23) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போக்குவரத்து ஓய்வு பெற்றோர் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.பாஸ்கரன் தலைமையில் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடைய கோரிக்கையை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் கடலூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக.23) விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து தலை மையகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முத்துக்குமரன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.