அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு
கள்ளக்குறிச்சி, அக். 6- கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் ரூ. 5.75 கோடி மதிப்பில் 50 படுக்கை வசதி கொண்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை திங்களன்று ( அக்.6 ) காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும்வடக்கு மாவட்டச் செயலாளரும் சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான தா. உதயசூரியன் மற்றும் மக்களவை உறுப்பினர் அண்ணன் தே.மலையரசன், துறை சார்ந்த அதி காரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சியில் ரூ.6.4 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவக் கிடங்கு திறந்து வைக்கப்பட்டது.
