tamilnadu

img

மின்வாரியப் பணிகள் மாதக்கணக்கில் கிடப்பில் உள்ளது 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் குற்தச்சாட்டு

மின்வாரியப் பணிகள் மாதக்கணக்கில் கிடப்பில் உள்ளது 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் குற்தச்சாட்டு

சென்னை, அக். 17- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டத்தில் மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பேசுகையில், மழைக்காலத்தில் 4ஆவது வார்டு அதிகமாக பாதிக்கப்படுவதால் தேங்கிய மழைநீரை அகற்ற தனியாக ஜெசிபி, பாப்கார்ட், லாரி வழங்கி கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார். வார்டில் 100 தெருக்கள் தார் சாலைகளாக, ஐஎல்பி சாலைகளாக அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த அவர், முகிலன் ஒப்பந்ததாரர் 12 சாலைகள் போட வேண்டும் என்றாலும் 8 சாலைகள் மட்டுமே தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். காமராஜ் நகரில் 6 மாதங்களுக்கு முன்பே தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் இதுவரை சாலை அமைக்கும் பணி தொடங்கவில்லை என்றார். கிரிஜா நகரில் மின்சாரவாரியம் புதிய தார் சாலைகளை தோண்டி கேபிள் பதித்த பின்னர் முறையாக காங்கிரீட் போட்டு மறுசீரமைப்பு செய்வதில்லை என்றும், வள்ளுவர் நகரில் பில்லர் திறந்த நிலையில் சாலையில் விழுந்து கிடப்பதாகவும் தெரிவித்தார். இந்த பணிகள் நடைபெறவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரித்தார். இதற்கு பதிலளித்த மண்டல அலுவலர் பண்டியன், ஆதிதிராவிடர் காலனி 15ஆவது தெருவில் மீண்டும் சாலை அமைக்கப்படும் என்றும், காமராஜ் நகர் சாலைகள் ஜனவரிக்குள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மின்வாரிய அதிகாரி கிரிஜா நகரில் மறுசீரமைப்பு பணியும், வள்ளுவர் நகர் பில்லர் பழுதுபார்ப்பும் உடனே செய்யப்படும் என்று உறுதியளித்தார்.