சென்னை, ஜூன் 10- சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ கம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து போக்குவரத்து அலுவலகங்க ளும் கணினி மயமாக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து போக்கு வரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:- வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்த அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்ப வர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்கு வரத்து அல்லாத வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பத்து டன் இனி தடையில்லா சான்றே இணைக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் விண்ணப்ப தாரர்கள் அனைத்து விண்ணப் பங்களிலும் செல்போன் எண், ஆதார் எண், இ-மெயில் முக வரி போன்றவற்றை தவறா மல் குறிப்பிட வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு விரைவாக தகவல் அனுப்ப வும், சிறந்த முறையில் சேவை அளிக்கவும் முடியும். இவ்வாறுஅவர் கூறினார்.