கொளத்தூர்தொகுதியில் ரூ.22 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்
முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்அடிக்கல்நாட்டினார்
சென்னை, செப்.24- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் புதனன்று (செப்.24) கொளத்தூர் தொகுதிகுட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.22.15 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.8.65 கோடி செலவில் முடி வுற்ற பணிகளை திறந்து வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பெரம்பூரில் அமைந்து ள்ள முரசொலி மாறன் பூங்காவை ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக் கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். ஜி.கே.எம். காலனியில் பல்நோக்குமையகட்டிடம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.95 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் சீனிவாசநகர் 3-வது பிரதான சாலையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடம் மற்றும் சமையல் கூடம், ஜி.கே.எம். காலனி பிரதான சாலையில் ரூ.28.20 லட்சம் மதிப் பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம், ஜி.கே.எம். காலனி 32-வது தெருவில் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் ஆகியவை அடங்கும். மேலும் பல்லவன் சாலையில் அமைந்துள்ள தாங்கல் மயான பூமியில் ரூ. 1.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உள்கட்டமைப்புகளுடன் கூடிய நீத்தார் மண்டபம் மற்றும் வார்டு 64 முதல் 78 வரையிலான பல்வேறு தெருக்களில் ரூ.10 கோடி மதிப்பில் 10,463 எல்இடி தெரு விளக்குகளை மாற்றி புதிய விளக்குகள் பொருத்தும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். திருவிக நகரில் புதிய பள்ளி திறப்பு திறந்து வைக்கப்பட்ட பணிகளில் திரு.வி.க.நகர் மண்டலம் சோமையா தெருவில் 10 வகுப்பறைகளுடன் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.3.59 கோடி செலவில் கட்டப்பட்ட சென்னை உயர் நிலைப்பள்ளி கட்டடம், பெரம்பூர் ரங்கசாயி தெருவில் 10 வகுப்பறை களுடன் 3.96 கோடி ரூபாய் செல வில் கட்டப்பட்ட சென்னை நடுநிலை ப்பள்ளி கட்டடம் ஆகியவை உள்ளன. செயற்கை புற்களுடன் கால்பந்து மைதானம் ரங்கசாயி தெருவில் அமைந்துள்ள மேயர் முனுசாமி விளையாட்டுத் திடலில் ரூ.64.80 லட்சம் செலவில் செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், திறந்த வெளி உடற்பயிற்சி உபகரணங்கள், திறந்தவெளி இறகுப்பந்தாட்ட மைதா னம், மின் விளக்குகள், பசுமைப் புல்வெளி ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஆஸ்ட்ரோ டர்ஃப் கால்பந்து மைதானத்தையும் திறந்து வைத்தார். அமிர்தம்மாள் காலனி யில் 45 லட்சம் ரூபாய் செலவில் இறகுப்பந்து மைதானம், சிறுவர் விளை யாட்டு மைதானம் மற்றும் திறந்த வெளி உடற்பயிற்சி உபகரணங் களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலையும் திறந்து வைத்தார். முதலமைச்சர் சோமையா தெரு வில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார். பின்னர் சோமையா தெருவில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உப கரணப் பொருட்கள் மற்றும் மடிக் கணினி வழங்கினார். மேலும் பயனா ளிகளுக்கு மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மாவு அரவை இயந்திரங்கள், மூன்று சக்கர மோட்டார் வாகனம், தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகளுக்கு குடை கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.