கடலூரில் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
கடலூர், செப். 15- அரசு ஆணை 118ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பாக கடலூர் இணை இயக்கு நர் புள்ளியியல் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிசங்கர் கோரிக்கையை விளக்கி பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் காசிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில செயலாளர் லெனின் நிறை வுரையாற்றினார். பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இராம.வெங்கடாஜலபதி, பொரு ளாளர் வெங்கடேசன், துணைத் தலை வர்கள் அரிகிருஷ்ணன், பாபு, இணைச் செயலாளர்கள் பொற்செழியன், கட லூர் வட்டச் செயலாளர் ராமர் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க முன்னாள் மாவட்டப் பொரு ளாளர் ஜான் பிரிட்டோ, பொது சுகா தாரத்துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் கவியரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.