tamilnadu

img

‘வேண்டாம் போதை, வேண்டும் வேலை’ முழக்கத்துடன் கிரிக்கெட் போட்டி

‘வேண்டாம் போதை, வேண்டும் வேலை’  முழக்கத்துடன் கிரிக்கெட் போட்டி

புதுச்சேரி, அக்.14- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகர கமிட்டி சார்பில், இளைஞர்களை சீரழிக்கின்ற போதை கலாச்சாரத்தை கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கோரி யும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘வேண்டாம்; போதை வேண்டும் வேலை’ என்ற லட்சிய முழக்கத்துடன், இளைஞர்க ளுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்று லாஸ்பேட்டை ஹெலிபேட் விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரைசிங் ஸ்டார் அணி முதல் பரிசு வென்றது. இரண்டாம் பரிசு ஸ்டார்ஸ் அணி வென்றது. நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உழவர்கரை கமிட்டி 18 வது மாநாட்டின் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு 2025 ஆண்டிற்கான சங்கத்தின் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உழ வர்கரை கமிட்டி செயலாளர் நிலவழகன், கமிட்டி உறுப்பினர்கள் தாமோதரன், ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.