மக்கள் பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் மேல்மலையனூரில் சிபிஎம் போராட்டம்
விழுப்புரம், செப்.10- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் செவ்வாயன்று (செப்.9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ஹரிஹர குமார் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் பேசுகையில்,“மக்கள் பணி களை செய்யாமல் மெத்தனம் காட்டும் வட்டாட்சியர்,வருவாய் துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு எழில் ராஜா, இலக்கிய பாரதி, வெங்கடபதி,ரவி, குமார், சுரேஷ், கர்லினா, கார்த்திகேயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.