tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு  ஆதரவாக  சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, அக். 4- அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 45 நாட்களாக காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்க ளின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகிலும், ஆரணி அண்ணா சிலை அருகிலும்  கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. சி. ரமேஷ்பாபு, எம். பிரகலநாதன் ஆகி யோர் தலைமை தாங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எம். பிரகலநாதன், கே. வாசுகி, இரா. பாரி, எஸ். ராமதாஸ், ந. சேகரன், ஏ. லட்சு மணன், சிஐடியு நிர்வாகிகள் கே. நாகராஜ், முரளி, சிபிஎம் நிர்வாகிகள் கணபதி, ச. குமரன், அண்ணாமலை, தமிழ்ச்செல்வி, கோபி, சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.