tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தம்பதி உயிரிழப்பு: மருத்துவர் கைது 

அம்பத்தூர், செப். 21- ஆவடியில் கார் மோதிய தில் இரு சக்கர வாகனத் துடன் இழுத்து செல்லப் பட்டு தம்பதி உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் இரு சக்கர வாகனத்துடன் சிக்கிய தம்பதி அறிவரசன், சரண்யா  ஆகியோர் சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர்.  இந்த வழக்கில் காரை ஓட்டி வந்த அரசு மருத்து வரை போலீஸார் சனிக் கிழமை கைது செய்தனர்.

தண்டகாரண்யம் திரைப்படம் திருமாவளவன் எம்பி பாராட்டு

சென்னை,செப்,21 தண்டகாரண்யம் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தண்டகாரண்யம் படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,” பழங்குடிகளுக்கு எதிரான அரசப் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் அதியன் ஆதிரையின் புரட்சிவனம் தண்டகாரண்யம். படத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு 2, 3 நாட்கள் அந்தக் காட்டிலேயே பயணித்ததைப் போன்ற உணர்வு மேலோங்கியிருந்தது. வசனங்கள், இயக்குநரின் சிந்தனை முதிர்ச்சிக்குச் சான்றுகளாகவுள்ளன” என்றார்.

இரட்டை கொலை வழக்கில் வியாபாரிக்கு  3 ஆயுள் தண்டனை: கடலூர் நீதிமன்றம்  தீர்ப்பு

கடலூர்,செப்.21- விஜயலட்சுமி வயது 48, அவரது மகள்  சந்தியா (24)  ஆகியோர் 1.3.2021 அன்று  தமிழக பகுதியான சிங்கிரி குடி கிராமத்தில் அவருடைய தோட்டத்தில் மாடுகளை பராமரிக்கும் போது கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தனிப்படைகள் அமைத்து மேற்கொள் ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட இளநீர் வியாபாரியான புதுச்சேரி, முதலியார் பேட்டையை சேர்ந்த இருசப்பன் (வயது 54) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 10.04.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடலூர் மகிளா நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் மகிளா நீதிமன்ற நீதி பதி குலசேகரன் சனிக்கிழமை தீர்ப்பளித் தார். அதில் இளநீர் வியாபாரி இருசப்ப னுக்கு 3  ஆயுள் தண்டனை வழங்கி உத்தர விட்டார். மற்றும் ரூ.3ஆயிரம் அபராதம்  விதிக்கப்பட்டது. கட்ட தவறினால் மேலும் 9  மாதம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப் பட்டது.