தோழர் சி.ராஜேந்திரன் காலமானார்
சிதம்பரம், செப்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் புதனன்று (செப் 24) காலமானார். அவருக்கு வயது 68. சிபிஎம் சார்பில் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பராயன், வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர் செல்லையா, பாலசுந்தரம் உள்ளிட்ட கட்சியினர், பொதுக்கள், உறவினர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலம் வியாழனன்று அய்யனூர் கிராமத்தில் நடைபெற்றது. பின்னர் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.