tamilnadu

மாற்றுத்திறனாளியை தாக்கிய சமூகவிரோதிகள்

புதுச்சேரி, ஏப். 12- புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலமுருகன் (42). இவர் பாக்கமுடையான் பேட்டை கொக்குபார்க் அருகில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி வினோபா நகரைச் சேர்ந்த ரவுடி லெனின் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் முருகனிடம் வந்து மாமுல் கேட்டுள்ளனர். அதற்கு தர மறுத்த பாலமுருகனை தாக்கி, ஜூஸ் கடையையும் சேதப்படுத்தினர். தலை கைகால் பகுதியில் பலத்த காயமடைந்த பாலமுருகன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தன்வந்திரி கவல்நிலையத்தில் புகார் அளித் தார். ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து புதுச்சேரி காதுகேளாதோர் சங்கத் தின் தலைவரும், சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினருமான ஆர்.சரவணன் தலைமையில் புதுச்சேரி காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவ லகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த தன்வந்திரி காவல் நிலைய ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சங்க செயலாளர் பாசித் உட்பட திரளான காதுகேட்காத வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

;