போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்
புதுச்சேரி அரசுக்கு சிஐடியு கோரிக்கை
புதுச்சேரி, ஆக.1- சாலை போக்குவரத்து தொழி லாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சிஐடியு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. நிரந்தர தன்மையுள்ள வேலைகளில் நிரந்தர தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற விதியை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (பிஆர்டிசி) நிறு வனத்தில் கடைபிடிக்காமல் ஒப்பந்த ஊழி யர்களை வைத்து உரிமைகளை 15 ஆண்டு களாக பறித்து வருகின்றனர். எனவே, தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி யில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனுவாசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தொழி லாளர்களின் நியாயமான இப்போராட் டத்தை அரசு தலையிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்க வேண்டும். போராட்டத்தில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களின் குடும்ப ங்களும், புதுச்சேரி கிராமப்புற மக்க ளும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தொழிற்சங்க தலை வர்களை அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அரசின் பாரபட்ச செயல் தொடருமானால் அனைத்து பகுதி தொழிலாளர்களையும் திரட்டி புதுச்சேரி அரசுக்கு எதிரான போராட்டத்தை சிஐடியு நடத்தும்”என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.