துறைமுக ஊழியர்களுக்கு போனஸ் கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்
சென்னை, அக். 9 - துறைமுக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க கோரி புதனன்று (அக்.7) சென்னை துறைமுக அலுவலக வளா கத்தில் மெட்ராஸ் போர்ட் அண்ட் டாக் எம்ப்ளாயிஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, இந்திய நீர் வழி போக்கு வரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் நரேந்திர ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: துறைமுகங்களின் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பு போனஸ் வழங்க வேண்டும். கடந்தாண்டு அக்டோபர் மாதமே, போனஸ் வழங்க ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கடந்த மாதம் துறைமுக நிர்வாக தலைவர்களிடம் கையெழுத்து பெற்று தீபாவளிக்கு முன்னர் போனஸ் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்தது. அதன்படி, போன்ஸ் வழங்கப்படாமல் உள்ளது. தீபாவளிக்கு முன்பு போனஸ் கிடைக்குமா என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். போனஸ் வழங்க தாமதித்து முன்பணம் மட்டும் வழங்கினால், 2020-2025 ஆண்டு செப்டம்பர் வரை பணி யாற்றிய பலர் முன்பண தொகையை பெற தகுதியற்றவர்கள் என்ற நிலை உருவாகும். ஆகவே போனஸ் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மெட்ராஸ் போர்ட் அண்ட் டாக் எம்ப்ளா யிஸ் யூனியன் பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் பொருளாளர் வி.தமிழ்ச்செல்வன், சென்னை துறைமுக ஆணையத்தின் தொழிலாளர் வாரிய பிரதிநிதி செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
