tamilnadu

img

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாத ஊதியம் புதுச்சேரி அரசுக்கு சிஐடியு கோரிக்கை

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாத ஊதியம்  புதுச்சேரி அரசுக்கு சிஐடியு கோரிக்கை

புதுச்சேரி, செப்.9 - வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாத ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சிஐடியு மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. சிஐடியு புதுச்சேரி மாநில வீட்டு வேலை செய்வோர் சங்கத்தின் மாநில மாநாட்டிற்கு சிஐடியு மாநிலத் தலைவர் சீனு வாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தமிழரசி வரவேற்றார். முன்ன தாக, சங்கத்தின் கொடியை அருள் மேரி ஏற்றி வைத்தார். சிபிஎம் உழவர்கரை நகரச் செயலாளர் ராம்ஜி, தையல் கலை ஞர்கள் சங்க செயலாளர் காயத்ரி ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் செயலாளர் லாவண்யா  வேலை அறிக்கையையும் , பொருளாளர் மாலதி வரவு-செலவு அறிக்கைகளையும் சமர்ப்பித்தனர். இறுதியாக, சிஐடியு அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி நிறைவு செய்து பேசினார். சிஐடியு மாநில நிர்வாகிகள் கொளஞ்சி யப்பன், மதிவாணன், ரவிச்சந்திரன், தினேஷ் குமார், விஜயகுமார், பரமேஸ்வரி மின்னலா, கண்ணம்மா  உள்ளிட்ட திரளான பெண் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.  நிர்வாகிகள் தேர்வு மாநில தலைவராக பரமேஸ்வரி, பொதுச் செயலாளராக லாவண்யா, பொருளாளராக மாலதி உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாநில குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடு முறை அளித்து புதுச்சேரி அரசு சட்டம் இயற்ற வேண்டும், அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வாரி யத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, பண்டிகை கால உதவித்தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், வாடகை வீட்டில் குடியிருக்கும் தொழி லாளர்களுக்கு அரசு சார்பில் இலவச குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.