tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவிரியில்  வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை, ஜூலை 25 - கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையில் இருந்து நீர்த் திறப்பு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரை யோரங்களில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியைத் தாண்டியுள்ளது. நீர் இருப்பு 52.662 டி.எம்.சி. யாக உள்ளது குறிப்பிடத் தக்கது. 

வங்கதேச வன்முறை: சென்னை வந்த மேலும் 42 தமிழக  மாணவர்கள்!

சென்னை, ஜூலை 25 - வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அங்கு  மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்களை மீட்க, அயலகத் தமிழர்  நலன் மற்றும் மறுவாழ்வுத்து றை ஆணையரகத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி கடந்த 3 நாட்களில் 166 மாணவர்கள் சென்னை அழைத்து வரப் பட்டனர். இந்த நிலையில், 4-வது நாளாக தமிழ்நாட்டை சேர்ந்த 42 மாணவர்கள் சென்னை திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.