tamilnadu

img

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா!

புதுதில்லி, அக். 17 - உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார். 2022 நவம்பர் முதல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ஒய். சந்திர சூட், நவம்பர் 11-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலை யில், அடுத்த தலைமை நீதிபதி யாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்க ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு டி.ஒய். சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சஞ்சீவ் கண்ணா அடுத்த தலைமை நீதிபதி யாக பதவியேற்பார். அதைத் தொடர்ந்து, அடுத்த 6 மாத காலம்- அதாவது 2025 மே 13-ஆம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வகிப்பார். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு  அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370-ஐ ரத்து செய்தது, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தது உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதி மன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் சஞ்சீவ் கண்ணாவும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.