districts

img

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு! அபாயம் உணராமல் நீச்சலடிக்கும் சிறுவர்கள்

கோவை, அக்.17- நொய்யல் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கின்ற நிலையில், ஆபத்தை உண ராத சிறுவர்கள் ஆற்றில்  இறங்கி விளையாடுகின்ற னர். அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி  பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.  கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்க ளாக கனமழை பெய்து வருகிறது. இதனால்,  சிறுவாணி நீர் பிடிப்பு பகுதி நொய்யல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடுகிறது. இதனிடையே, நொய்யல்  ஆற்றில் முதல் தடுப்பணையான சித்திரச் சாவடி தடுப்பணை முழு கொள்ளவை  எட்டி நிரம்பி வருகிறது. இதனால், நொய் யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதில், ஆபத்தை  உணராமல் பள்ளி சிறுவர்கள் நீரில் நீச்சல்  அடித்தும், பல்டி அடித்தும் விளையாடி வரு கின்றனர். மழை தொடர்ந்து பெய்து வரு வதால், அணையில் தண்ணீரின் வேகம்  அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்  கொள்ளாமல் சிறுவர்கள் ஆற்றில் இறங்கி  விளையாடுவதால் அசம்பாவிதம் ஏற்படும்  ஆபத்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடி யாக சம்பவ இடத்தில், கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அபாய பலகை வைத்து இது போன்ற மழைக் காலங்களில் அணைக் கட்டுக்கு யாரும் வராமல் தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.