districts

சாதிப் பெயரை குறிப்பிட்டு மாணவன் மீது தாக்குதல்

சேலம், அக்.17- உடல்நிலை சரியில்லாமல் ஒரு வாரமாக பள்ளிக்குச் செல் லாத பள்ளி மாணவனை, சாதிப்  பெயரை குறிப்பிட்டு தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, சேலம் ஆட் சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், சிந்தாமணி யூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன், சிந்தா மணியூர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் பயின்று வருகின்றார். கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில் லாமல் அம்மாணவன் பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பில் இருந்துள் ளார். விடுப்பு எடுப்பதற்கு முன்ன தாகவே மாணவனின் தாய், பள் ளிக்குச் சென்று வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம், “தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மருத்துவ சிகிச்சை அளிக்க விடுமுறை வழங்க வேண்டும்” என கூறிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வியா ழனன்று வழக்கம்போல் மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப் போது வகுப்பறையிலிருந்த மாண வனிடம், தலைமை ஆசிரியர் காம ராஜ் “ஏன் ஒரு வாரமாக விடுமுறை எடுத்தாய்?” என்று விசாரித்துள் ளார். அதற்கு உடம்பு சரியில்லை என பதிலளித்த மாணவனின் சாதிப் பெயரை குறிப்பிட்டு, “உங்க ளுக்கு இதே வேலை தான்” என்றுக் கூறி, கையால் தலையில் பலமாக பலமுறை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த மாணவன், பள்ளிக்கு வந்த தனது தாய்மாமாவிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த அவர், மாணவனை சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத் துவமனைக்கு அழைத்துச் சென்று பிறகு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித் தார். இந்நிலையில், ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் எடுக்கப்பட்ட விடுமுறை குறித்து ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தும், பள்ளிக்குச் சென்ற தனது மகனை சாதிப் பெயரை குறிப்பிட்டு தாக்கிய தலைமை ஆசிரியர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவனின் தாயார் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.