districts

மகனை காவலர்கள் கொடுமைப்படுத்துவதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

திருப்பூர், அக்.17- பொய் வழக்கு போட்டு தனது மகனை போலீசார் கொடுமைப் படுத்துவதாகவும், உரிய நடவ டிக்கை எடுத்து தனது மகனை மீட்டுத்தர வேண்டும் என வலியு றுத்தி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாய் கண்ணீருடன் மனு அளித் தார். திருப்பூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத் தில், காங்கேயம் - திருச்சி சாலை,  கடலை காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த சக்தி கனி என்பவர் மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சக்திகனியின் இளைய மகன் தினேஷ் (17) மளி கைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், புதனன்று தினே ஷின் கடைக்கு வந்த அவிநாசி பாளையம் போலீசார், கடையில் போதைப் பொருட்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டவை உள்ள னவா? என சோதனை செய்தனர். ஆனால், கடையில் அவ்வகை யான பொருட்கள் இல்லை என் பதை அறிந்த போலீசார், தினேஷை அவினாசிபாளையம் காவல் நிலை யத்திற்கு அழைத்து சென்று சர மாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தினேசை அவரது தாயார், திருப்பூர் மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் அனு மதித்துள்ளார். சிகிச்சையில் இருந்து வந்த தினேஷை, வியாழ னன்று காலை அவிநாசிபாளையம் போலீசார் மீண்டும் காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்றுள்ள னர். எனவே, தனது மகனையும், தமது குடும்பத்தாரையும் அவினாசி பாளையம் போலீசார் வாழவிடா மல் தொடர்ந்து சித்திரவதை செய்து வருவதாகவும், இதுபோன்ற அத்து மீறலில் ஈடுபடும் போலீசார் மீது  தக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். தனது மகன் தினேஷை மீட்டுத் தர வேண்டும், என சக்தி கனி கண் ணீருடன் தெரிவித்தார்.