districts

img

அக்.20இல் உதயநிதி சேலம் வருகை

சேலம், அக்.17- சேலத்தில் அக்.20 ஆம் தேதியன்று நடைபெற உள்ள,  கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா  சேலத்தில் அக்.20 ஆம் தேதியன்று துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழா வில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிக ளும் வழங்கப்படவுள்ளன. இதனையொட்டி, விழா முன்னேற் பாடு பணிகள் குறித்து பழைய பேருந்து நிலையம் அருகி லுள்ள சேலம் மாநகராட்சி, நேரு கலையரங்கில் தொடர்பு டைய அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் வியாழ னன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சி யர் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், ஆணையர் ரஞ்ஜீத் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.