tamilnadu

img

ஷேக் ஹசீனாவிற்கு வங்கதேச நீதிமன்றம் பிடி வாரண்ட்

டாக்கா, அக். 17 - வங்கதேச நாட்டின் முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீ னாவிற்கு அந்நாட்டு நீதி மன்றம் பிடி வாரண்ட் பிறப் பித்துள்ளது. வங்கதேசத்தில் எழுந்த மாணவர் போராட்டத்தைப் பயன்படுத்தி, அந்நா ட்டிற்குள் குழப்பதையும், பெரும் கலவரத்தையும் அமெரிக்கா ஏற்படுத்தியது. கலவரக்காரர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு உள்ளே யே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.  முன்னதாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, தற்காலிகமாக இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் மீண் டும் எப்போது நாடு திரும்பு வார் என்று தெரியாத நிலை யே நீடித்து வருகிறது.  முகமது யூனுஸ், வங்க தேச இடைக்கால அரசின் ஆலோசகராக பொறுப் பேற்ற பிறகு ஹசீனா மீதும் அவரது கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மீதும் கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகளை வங்கதேச இடைக்கால அரசு பதிவு செய்தது.  அதனடிப்படையில், ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்துள்ளது.  நவம்பர் 18-ஆம் தேதிக் குள் ஷேக் ஹசீனாவை நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.