tamilnadu

img

மழை வெள்ளத் தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறையினர்!

சென்னை, அக். 17 - சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில், மழை வெள்ளத் தடுப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கை களில், அரசுத்துறை அதி காரிகள், ஊழியர்கள், காவல் துறையினர், தூய்மைப்பணி யாளர்கள் சிறப்பான முறை யில் பணியாற்றியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவ மழை யையொட்டி, சென்னை கொளத்தூர் தொகு திக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள், பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின்  வியாழக்கிழமை (அக்.17) அன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, செய்தி யாளர்களை சந்தித்த முத லமைச்சர், “சென்னையில் மழை வெள்ள நிவாரணப் பணிகள் மிகச் சிறப்பாக இருந்தது. பெருமைப்படும் அளவுக்கு மக்கள் அனை வரும் பாராட்டும் அளவுக்கு இருந்தது. அதற்காக மாநக ராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். தயார் நிலையில் அரசு வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 2 மாதங் கள் உள்ளதே என்ற கேள்வி க்கு, “எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது என்று ஏற்கெனவே கூறியுள் ளோம். தொடர்ந்து செய்து வருகிறோம்,” என்று முத லமைச்சர் கூறினார். சென்னையில் தேங்கி யிருந்த தண்ணீர் வடிந்து விட்டதா, என கேட்கப்பட்ட கேள்விக்கு, “எங்களுக்குத் தெரிந்து ‘ஆல்மோஸ்ட்’ வடிந்து விட்டது. தெரியா மல் சில இடங்களில் இருந்தா லும் கூடஅதில் உரிய கவ னம் செலுத்தி நடவடிக்கை எடுக்கிறோம்” என்று பதி லளித்தார். சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் குறித்து கேட்டதற்கு, “பாரா ட்டுக்களும் வருகிறது. அதேநேரத்தில் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி நாங்கள் கவ லைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி, அதைத் தான் தொடர்ந்து செய்து வருகிறோம்,” என்றார்.

பிரியாணி விருந்து

முன்னதாக புளியந் தோப்பு பகுதியில் தூய்மைப் பணியாளர்களுடன் தேநீர் அருந்திய அவர், வியாழ க்கிழமை (அக்.17) தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தூய்மைப் பணியாளர்களை பாராட்டி  தலா ரூ. 2ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கினார். மேலும், அவர்களுக்கு பிரி யாணி விருந்து பரி மாறியதுடன், தாமும் அவர் களுடன் அமர்ந்து சாப்பிட் டார்.