tamilnadu

img

வடலூரில் நடுரோட்டில்  தீ பற்றி எரிந்த கார்

வடலூரில் நடுரோட்டில்  தீ பற்றி எரிந்த கார்

கடலூர், செப்.16 - கடலூர் மாவட்டம், வடலூரில் சாலையில் கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடலூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான கார் வீட்டில் வெகு நாட்களாக நின்றுள்ளது. இந்த காரினை சரி செய்வதற்காக மெக்கானிக்கிடம் விட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை(செப்.16) காரை எடுத்துச் சென்றபோது வடலூர் சந்தை அருகே கார் திடீரென தீப்பிடித்தது. அப்போது, மெக்கானிக் காரை விட்டு இறங்கி ஓடிய நிலையில் கார் முழுவதுமாக எரிய துவங்கியது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை முழுமையாக அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. இதன் காரணமாக கடலூர் - வடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.