tamilnadu

img

செங்கல் சூளை தொழிலாளர்கள்  வீட்டுமனை வழங்க கோரிக்கை

செங்கல் சூளை தொழிலாளர்கள்  வீட்டுமனை வழங்க கோரிக்கை

ஊத்தங்கரை, செப்.2- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள குன்னத்தூர் பகுதியில் செங்கல் சூளைகளில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், சொந்த வீடு அல்லது மனை இல்லாததால் சிறு வீடுகளில் வாடகைக்கு தங்கியுள்ள இவர்கள், சூளையில் கிடைக்கும் குறைந்த கூலியை வைத்து பிழைத்து வருகின்றனர். சில நேரங்களில் வாடகை செலுத்தக்கூட முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.