தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஆவடி
, அக்.24- ஆவடி அருகே உள்ள மூன்று தனியார் பள்ளிக ளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி காவல் ஆணை யரகத்திற்கு உட்பட்ட பரித்திப்பட்டு வேலம்மாள் பள்ளி, செவ்வாய்ப்பேட்டை வேலம்மாள் பள்ளி, திரு மழிசை சென்னை பப்ளிக் ஸ்கூல் ஆகிய மூன்று பள்ளி களில் சுமார் 5ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். புதனன்று இரவு இந்த மூன்று பள்ளிகளிலும் வெடிகுண்டு வைத்திருப்ப தாக ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தங்கமணி தலை மையிலான குழுவினர் மோப்ப நாய்களுடன் பள்ளி களுக்கு விரைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தேடியபோது வெடி குண்டுகள் எதுவும் சிக்க வில்லை. இது வதந்தி என்பது போலீசார் விசா ரணையில் தெரியவந்தது.
குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது வேலூர்
, அக்.24- ஆந்திராவில் இருந்து பேருந்தில் 7 கிலோ குட்கா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் காட்பாடி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி பேருந்து வந்தது. அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், சந்தேகம் அளிக்கும் வகையில் அமர்ந்திருந்த நபரின் பையை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்குமாரை கைது செய்தனர். மேலும், 7 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
சென்னை, அக்.24- பல்லாவரம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.12,000 லஞ்சம் வாங்கிய திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த மேகலாதேவி, திருநீர்மலையில் வாங்கிய நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த விண்ணப்பத்தை நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா ரூ.12,000 லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்த மேகலாதேவி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முறையிட்டார். அதன் அடிப்படையில் புதன்கிழமை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மேகலாதேவி மூலம் சங்கீதாவிடம் கொடுத்து, மறைந்திருந்த அதிகாரிகள் அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். வழக்குப் பதிவு செய்து விசா
நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது சென்னையில் நவ.9 வழங்கப்படுகிறது
சென்னை, அக்.24- நல்லி நிறுவனமும் திசை எட்டும் மொழி யாக்க காலாண்டு இதழும் இணைந்து வழங்கும் 2025ஆம் ஆண்டு நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுக்கு இவ்வாண்டு ஏழு மொழியாக்கப் படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 விருதுகள் முதல்நிலை மொழிபெயர்ப்பாளர்களுக்கும், 2 விருதுகள் சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. முதல்நிலை மொழிபெயர்ப்பாளர்க ளுக்கு தலா ரூ.20,000 உடன் விருதுச் சின்னமும், சிறார் இலக்கிய மொழி பெயர்ப்பாளர்களுக்கு தலா ரூ.10,000 உடன் விருதுச் சின்னமும் வழங்கப்படும். முதல்நிலை மொழிபெயர்ப்பாளர்களாக சீனிவாச ராமானுஜம் (அசோகர் - ஆங்கிலத்திலிருந்து தமிழில்), சையது ரபீக் பாஷா (ஃகாலிப் கவிதைகள் - உருதுவிலிருந்து தமிழில்), அனுராதா ஆனந்த் (அழிக்க முடியாத ஒரு சொல் - ஆங்கிலத்திலிருந்து தமிழில்), கௌரி கிருபானந்தன் (ஆகாசம் நாவசம் - தமிழிலிருந்து தெலுங்கில்), ஜமுனா கிருஷ்ணராஜ் (பாரதிகி காவ்யமாலா - தமிழிலிருந்து இந்தியில்) ஆகியோரும், சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களாக சுகுமாரன் (தாத்தாவின் மூன்றாவது டிராயர் - ஆங்கிலத்திலிருந்து தமிழில்), முனைவர் டி. ராஜேந்திரன் (கிராண்ட் பா ஆஃப் வுட் - தமிழிலிருந்து ஆங்கிலத்தில்) ஆகி யோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது வழங்கும் விழா 2025 நவம்பர் 9-ஆம் தேதி சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள நாரத கான சபா சிற்றரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறஉள்ளது.
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
சென்னை, அக்.24- ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார். ஓராண்டு அனஸ்தீஸியா டெக்னீசியன் (18 இடங்கள்), அறுவை அரங்கு டெக்னீசியன் (21 இடங்கள்), ஆர்தோபீடிக் டெக்னீசியன் (9 இடங்கள்) ஆகிய பாடப்பிரிவுகளில் மொத்தம் 48 இடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர் டிசம்பர் 31-ஆம் தேதி அன்று 17 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் கட்டணமின்றி வழங்கப்படும். விவரங்களுக்கு https://gmcomu.ac.in/ என்ற வலைதளத்தைப் பார்க்கலாம். "வெற்றி நிச்சயம்" திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற வாய்ப்புள்ளது.