வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
வேலூர், ஜூலை 1 - வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வா யன்று (ஜூலை 1) ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது வெடிக்கும் என்று தபால் மூலம் கடிதம் அனுப்பட்டிருந்தது. அந்த மொட்டை கடிதத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதி இருந்ததால் காவல்துறைக்கு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் அளித்தனர். எனவே விரைந்து வந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் 5 தளங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பின்னர் அது புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. வெடிகுண்டு இல்லை என காவல்துறையினர் சொன்ன பிறகு அரசு ஊழியர்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.