100 நாள் வேலையை முடக்கும் பாஜக அரசு கள்ளக்குறிச்சியில் 100 கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த சிபிஎம் முடிவு
கள்ளக்குறிச்சி, அக். 11- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டப்படி நாடு முழுவதிலும் கிராமப்புற விவசாய தொழி லாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்ப தற்காக அளிக்கப்பட்டு வந்த 100 நாள் வேலைக்கு வழங்கி வந்த நிதியை மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து,படிப்படியாக குறைத்து வந்தது. இதனால் வேலை செய்யும் நாட்கள் குறைக்கப்பட்டது. அத்துடன் வேலை செய்தவர்களுக்கு கூலி பாக்கி பல மாதங்களாக கொடுக்கப்படா மல் உள்ளது. இந்த நிலை கடந்த மூன்று நான்கு வருடங்களாக தொடர்கிறது. கடந்த பட்ஜெட்டுக்கு முன்பு செய்த வேலைக்கு இதுவரை சம்பளம் கொடுக்க வில்லை என்பதுடன், கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் பாதி கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள கூலிக்கு போய்விடும். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அனேகமாக 10 நாட்க ளுக்கு மட்டுமே வேலை கொடுக்க முடியும் என்பதுடன், ஊராட்சி அளவில் இந்த நிதியினை வேறு சில பணிகளுக்கு மடை மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் அதி காரிகளின் ஒத்துழைப்போடு இந்த நிதி மோசமான வகையில் கையாடல் செய்யப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுத்து முழுமையாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் புறம்போக்கு நிலம், நீர்வழி புறம்போக்கு மற்றும் இதர நிலங்களில் பல பத்தாண்டு களாக குடும்பம் இருந்து வரும் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு இயக்கங்களை நடத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசாங்கம் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்குவதாக அறி வித்துள்ளது. இதை விரைந்து முடிக்கவும், ஆட்சேபனை உள்ள இடங்களை ஆய்வு செய்து தகுந்த முறையில் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். கிராம அளவில் இருக்கின்ற மக்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி மாவட்டம் முழுவதிலும் 100 கிராமங்களில் போராட்டங்களை ஊராட்சி மன்ற அலு வலகங்கள் முன்பு நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.