tamilnadu

img

பீடி, சுருட்டு தொழிலாளர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு

பீடி, சுருட்டு தொழிலாளர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு

ஈரோடு, ஜூலை 22- சொந்த வீட்டுமனை இல்லாத பீடி, சுருட்டு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பட்டாவுடன் இலவச வீட்டுமனை வழங்க வேண் டுமென ஈரோடு மாவட்ட சிஐடியு பீடி, சுருட்டு தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு பீடி சுருட்டு தொழிலா ளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 56  ஆவது ஈரோடு மாவட்ட மாநாடு, சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத் தில், தோழர் ஏ.கே.கமாலுதீன் நினை வரங்கில் செவ்வாயன்று நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு தலை வர் பி.சித்தாரா பேகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ். கைபானி வரவேற்றார். சிஐடியு மாவட்ட உதவிச்செயலாளர் சி. ஜோதிமணி தொடக்க உரையாற் றினார். மாவட்டச் செயலாளர் எச். ஸ்ரீராம் வாழ்த்தி பேசினார். இதில், பாரம்பரிய தொழிலான பீடி தொழிலை நலிவிலிருந்து பாது காக்க வேண்டும். பீடி மீது விதித் துள்ள 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பீடி சுற்றும் தொழிலா ளர்கள் அனைவருக்கும் வருங் கால வைப்புநிதி பிடித்தம் செய்ய வேண்டும். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் இத்தொழிலில் ஈடுப டும், சொந்த வீடில்லாத தொழிலா ளர்கள், அனைவருக்கும் இலவச வீட்டுமனையும், வீடு கட்ட ரூ.5 லட் சம் மானியமாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஆயிரம் பீடி  சுற்ற அடிப்படை சம்பளம் ரூ.300 ஆக உயர்த்த வேண்டும். அகவி லைப்படி கணக்கீட்டில் ஆயிரம் பீடிக்கு 10 பைசாவாக நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக பி.சித்தாரா பேகம், பொதுச்செயலாளராக ஆர்.செந் தில்குமார், பொருளாளராக பி. ஷாஜாதி, துணைத்தலைவர்களாக எஸ்.கைபானி, ஏ.மாபூபி, யு.முக மது சித்திக், எம்.சாஹிதா, பி.ஷர் மிளா, துணைச்செயலாளர்களாக எம்.ஹக்கிம், ஜெ.ஆசைத்தம்பி, ஏ. குத்புதீன், எம்.சித்ரா, எச்.ஹசீனா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். பீடி தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன் நிறைவுரையாற்றி னார். பி.தர்மலிங்கம் நன்றி கூறி னார்.