அப்பாசாமி பள்ளியில் மைதானம் மாணவர் சங்கம் கோரிக்கை
சென்னை, அக். 24- அப்பாசாமி பள்ளியில் விளையாடு மைதானம் அமைக்க வேண்டும் என மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் தண்டையார்பேட்டையில் உள்ள அப்பாசாமி பள்ளி கிளையின் முதல் மாநாடு வியாழனன்று (அக்.23) பகத்சிங் தலைமையில் நடைபெற்றது. அனுஷ்கா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டத் தலைவர் மோகனகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் அம்ரித்தா வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் குணா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் பள்ளியில் வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், நூலகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக அனுஷ்கா, செயலாளராக பகத்சிங் உள்ளிட்ட 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
