குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும்அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தல்
வேலூர், செப்.2 - தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க வேலூர் மாவட்ட 5வது மாநாடு வேலூர் பெல்லியப்பா அரங்கில் மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர்கள் ஜெயச் சந்திர பாக்கியராஜ் அஞ்சலி தீர்மானம் வாசிக்க, டி.ராஜ்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பா.வேலு வேலை அறிக் கையையும், பொருளாளர் ஞானசேகரன் நிதி நிலை அறிக்கையை முன்வைத்தனர். அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் பென்ஷனர்ஸ் சங்க மாநிலத் தலைவர் சி.ஞானசேகரன், ஓய்வூதியர் ஒருங்கிணப்பு குழு வேலூர் மாவட்ட செயலாளர் லோக நாதன்,சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசு ராமன் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலாளர் எஸ்.ஆறுமுகம் நிறைவுறை யாற்றினார். மாவட்ட தலைவராக எம்.பன்னீர் செல்வம்,செயலாளராக பா.ரவி,பொரு ளாளராக பி.ஞானசேகரன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். நிறைவாக பி.நாராயணசாமி நன்றி கூறினார். தீர்மானங்கள் 70வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்க ளுக்கு 10விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் முரண்பாடுகளை களைந்து கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை செயல்படுத்துவதோடு காப்பீடு திட்டத்தை அரசே ஏற்ற நடத்த வேண்டும், 1.04.2003 பணியில் சேர்ந்த அனை வருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், கம்யூடேசன் பிடித்த காலத்தினை 12 ஆண்டுகள் மட்டுமே பிடித்தம் செய்திடும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும், போக்குவரத்து கழக ஓய்வூதியர்க ளுக்கு மறுக்கப்படும் அரசுதுறை ஓய்வூதி யர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.