tamilnadu

img

ஜிஎஸ்டி சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற கோரி அனைத்து கட்சிகள் போராட்டம்

ஜிஎஸ்டி சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற கோரி அனைத்து கட்சிகள் போராட்டம்

சென்னை, அக். 5 - பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மதுபான கடைகளை அகற்றக்கோரி ஞாயிறன்று (அக்.5) பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி சாலையில் இரண்டு (எண்4087, 4376) டாஸ்மாக் கடைகள் உள்ளன. குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகளுக்கு அருகாமையில் இந்த கடைகள் உள்ளன. இந்தக்கடையால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு அவ்வப்போது சாலை விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, இந்த இரு டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி பல்லாவரம் 13வது குடியிருப்போர் பொதுநல சங்கம் முன்னெடுப்பில், அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியிருப்போர் நலச் சங்க தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தன்சிங் (அதிமுக), எம்.தாமு (சிபிஎம்), பூபாலன் (சிபிஐ) உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டப் பொருளாளர் ம.சிந்தன், பகுதிச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோரும் பேசினர். இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.