tamilnadu

img

முகையூரில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் வெற்றி

முகையூரில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் வெற்றி

விழுப்புரம், செப். 9- 100  வேலை கேட்டு மனு கொடுக்கும் பெருந்திரள் போராட்டம் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க சார்பில் முகை யூரில் நடைபெற்றது.இதையடுத்து அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. ஊரக வேலை சட்ட விதியின்படி வேலை அட்டை பெற்றுள்ள அனை வருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும், வேலை வழங்காத நாட்க ளுக்கு வேலை இல்லாத கால படியை வழங்க வேண்டும், கால தாமதமாக வழங்கப்படும் ஊதியத்திற்கு உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து வட்டியை சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து 100 நாள் வேலை தரும் வரைக்கும் வீட்டுக்குச் செல்ல மாட்டோம் என்று விவசாய தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மனுக்களை பெற்றுக் கொண்டு வரும் செப். 11 முதல் தொடர்ச்சியாக வேலை வழங்க உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து ஒப்புதல் ரசீது வழங்கி னர். இதனையேற்று போராட்டத்தை தற்காலி கமாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் வட்டச் செய லாளர் ஏ. ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பி னர் பி. சத்தியா, நிர்வாகிகள் என். எஸ்.ராஜா, கே. டி. ரகோத்தமன், பி. வெங்கடேசன், கே. வீரன், ஜி. ஜெயம்மாள், எம். எல்லப்பன், டி. குப்பன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ். கணபதி, மாதர் சங்க வட்ட செயலாளர் வி. தன லட்சுமி, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் எம். பழனி, சையத் ஜஹாங்கீர், மாற்றுத் திறனாளி சங்கம் மாவட்டத் தலைவர் பி. முருகன் மற்றும் பொன். ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.