கடலூர் மாவட்ட கிராமங்களில் 265 டன் மீன்கள் உற்பத்திக்கு நடவடிக்கை
சிதம்பரம், ஜூலை 30- கடலூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் 265 டன் மீன் கள் உற்பத்தி செய்யும் வகை யில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்டஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஊரக குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை புவனகிரி வட்டத்திற் குட்பட்ட வத்தராயன்தெத்து கிராமத்தில் மாவட்ட ஆட்சி த்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் புதன் கிழமை துவக்கி வைத்து, மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப் பாட்டிலுள்ள ஊராட்சி குளங்களில் மீன் உற்பத்தி யினை அதிகரித்திட மீன் குஞ்சு இருப்பு செய்யும் திட்ட த்தின்படி கடலூர் மாவட் டத்திலுள்ள ஊராட்சி குளங் களில் 250 ஹெக்டர் நீர் பரப்பில் 5 லட்சம் மீன்குஞ்சு கள் இருப்பு செய்யப்பட வுள்ளது”என்றார். ஊராட்சி குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 265 டன்கள் வரை உள்நாட்டு மீன் உற்பத்தி அதிகரித்திடும். இதன் மூலம் கிராமப்புறங்களில் புரத சத்து மிகுந்த மீன்கள் மக்களுக்கு கிடைக்கப் பெறுவதோடு கூடுதல் வருமானமும் கிடைக்கப் பெறும் என்றும் கூறினர். இந்த நிகழ்வின்போது, கடலூர் மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை துணை இயக்குநர் வேல்முருகன், பரங்கிப் பேட்டை உதவி இயக்குநர் ரம்யா, மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.