ஆணவக்கொலையை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சாதி மாறி காதலித்ததற்காக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தகவல் தொழில்நுட்ப ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை செய்யப்பட்டார். ஆணவக்கொலைகளை தடுக்க விரைந்து சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி வியாழனன்று (ஜூலை 31) மாநிலக் கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளைத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்டத்தலைவர் எஸ்.மிருதுளா, செயலாளர் தமிழ், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர் வர்ஷினி ஆகியோர் பேசினர்.