691 நிமிட இடைவிடாத வாசிப்பு!
நாமக்கல், அக்.17- திருசெங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில், 691 நிமிட வாசிப்பு நிகழ்வு அரங்கே றியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்ப கல்லூரியின் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் அறிவு மையம், வாசகர் மன்றம், பொது நூலகத்துறை ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டம், ஈரோடு சாலரம் பவுண்டேசன் இணைந்து மாணவர் தினம், இலக்கிய குரல்களின் மாரத்தான் 2.0 மற்றும் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி வியாழனன்று நடை பெற்றது. கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் அ.குமரவேல், புல முதல்வர் ரா.கோபாலகிருஷ்ணன், முனைவர் கே.பி.ஜெயந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினர் ஈரோடு கதிர், கௌரவ விருந்தினர் மேஜர் தி.மகு டேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்விழா வில் க.ச.கார்வேந்தன் எழுதிய நான்கு புத்தகங்களும், முனைவர் மன்சூர் அலி எழுதிய இரண்டு புத்தகங்க ளும் வெளியிடப்பட்டன. மேலும், இந்நிகழ்ச்சியை சிறப் பூட்டும் விதமாக இக்கல்லூரியின் 84 மாணாக்கர்கள் இடைவிடாது, 84 புத்தகங்களின் கருத்துக்களையும், அவைகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் 691 நிமிடங்க ளில் வழங்கினர். இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் நூலக இயக்குநர் அ.மா.வெங்கடாசலம் ஒருங்கிணைத்தார்.
